The Indian Times

அடப்பாவிகளா TRAILER போட்டுடாங்களா…ரசிகர்களிடம் கலகலப்பாக பேசும் சீயான் விக்ரம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இன்று இவர் நடிப்பில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இன்று சீயான் விக்ரம் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அங்கு ரசிகர்களிடம் ட்ரைலர் பார்த்தீங்களா எதுல பார்த்தீங்க என்று கேட்க அதற்கு பதில் கூறிய ரசிகர் போனில் பார்த்தேன் என்று கூற அடப்பாவிகளா அதுக்குள்ள ரீலிஸ் பன்னிட்டாங்களா என நகைச்சுவையாக கலகலப்பாக பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது.சீயான் ரசிகர்கள் அவர் பேசுவதை ரசித்து பார்த்து வருகின்றனர்

Embed video credits : GALATTA TAMIL 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in