The Indian Times

தனுஷ் போல் மழையில் குடைபிடித்து நடனமாடிய VIJAY TV மாகாபா

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் என தொலைக்காட்சிகளுக்குள் புகுந்தார்.முதன் முதலாக ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியாக விஜய் தொலைக்காட்சியை வந்தடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விஜய் தொலைக்காட்சியை வந்தடையவும் இவரது புகழ் உச்சியை தொட்டது,இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு வந்தார்.நவரச திலகம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து பல படங்கள் கதாநாயகனாகவும் நடித்தார்.இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பினை தராததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்தடைந்தார்.இவர் இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சி என்பதே கிடையாது.அந்தளவிற்கு விஜய் டிவியில் முக்கிய இடம் பிடித்துள்ளார் மாகாபா

Advertisement

தற்போது இவர் நிகழ்ச்சி ஷூட்டில் மழையில் குடையுடன் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாகாபா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் மாகாபா டேன்ஸ் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் சிலர் மாகாபாவை கலாய்த்தும் வருகின்றனர்.இவர் ரசிகர்கள் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in