The Indian Times

LIGER படத்தினை கலாய்த்து தள்ளிய BLUESATTAI மாறன்

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் லிகர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது காரணம் இப்படத்தில் நிஜ பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.இப்படத்தினை தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை தற்போது ப்ளுசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இதில் அ வர் கூறியதாவது,இதுபோன்ற ஸ்போர்ட்ஸ் ட்ராமா கதைகளில் பொதுவாக ஹீரோ ஸ்போர்ட்ஸ்ல கலந்துகொள்ள முடியாமல் ,அவரை கோச் கண்டறிந்து டிரைனிங் கொடுத்து போட்டிகளில் வெற்றிபெற வைப்பார்.பல தடைகளை தாண்டி ஹீரோ வெற்றிபெறுவது தான் படத்திற்கு சுவாரஸ்யமே,ஆனால் இங்கு அப்படி இல்லை ஹீரோவுக்கு தடையே இல்லை,எல்லாரையும் அடிச்சு போட்டுட்டு ஹீரோ போயிட்டே இருக்கார் என தெரிவித்துள்ளார் மேலும் படம் பாக்குற ஆடியன்ஸை நாக் அவுட் பண்ணிட்டாங்க,லாஸ்ட்ல மைக் டைசனையே நாக் அவுட் பண்ணிட்டீங்க ஏன்டா இப்படி கொலவெறி உங்களுக்கு என படத்தினை பங்கமாக கலாய்த்துள்ளார்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in