மக்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்…கேப்டன் கேப்டன் என விண்ணைமுட்டிய ரசிகர்கள் சத்தம்

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

மக்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்...கேப்டன் கேப்டன் என விண்ணைமுட்டிய ரசிகர்கள் சத்தம் 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

மக்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்...கேப்டன் கேப்டன் என விண்ணைமுட்டிய ரசிகர்கள் சத்தம் 2

விளம்பரம்

மேலும் மக்களுக்காக கட்சி தொடங்கி பல நல்லதுகளையும் ஆட்சிக்கு வராமலே தனது சொந்த பணத்தில் செய்துள்ளார்.தற்போது உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் இவர் பொது இடங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை.நேற்று விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது அலுவலகம் வந்து ரசிகர்கள் மற்றும் கட்சிக்காரர்களை சந்தித்துள்ளார்.அங்கு அவர் அனைவர்க்கும் கை காட்டி அவர்களை கையெடுத்து கும்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  Modern உடையில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை கேபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment