வெட்கப்பட்டு சிரிச்ச நயன்தாராவால் வியந்துபோன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வழி நெடுக காட்டுமல்லி.. விடுதலை நாயகியின் கியூட்டான புகைப்படங்கள்

வெட்கப்பட்டு சிரிச்ச நயன்தாராவால் வியந்துபோன ரசிகர்கள் 1

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பூர்ணா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்

வெட்கப்பட்டு சிரிச்ச நயன்தாராவால் வியந்துபோன ரசிகர்கள் 2

விளம்பரம்

திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றிருந்தனர்.ஆனால் இருவருக்கும் பட வேலைகள் இருந்ததால் சீக்கிரமாக நாடு திரும்பினர்.பின்னர் படத்தின் வேலைகளை முடித்துக்கொண்டு தற்போது இருவரும் தங்களது இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெய்ன் நாட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவை செல்லும் இடமெல்லாம் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது விக்னேஷ் சிவன் பதிவேற்றிய வீடியோ ஒன்றில் நயன்தாரா வெட்கப்பட்டு சிரிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment