The Indian Times

நான் எலிமினேஷன் போணுமா..மணிமேகலையை மறைமுகமாக தாக்கும் வித்யூலேகா | COOK WITH COMALI NEW VIDEO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் சூப்பர் ஸ்டார் கெட்டப்பில் வந்து அசதியுள்ளனர்.வழக்கம் போல் இந்த முறையும் கடந்த வாரத்தை விட காமெடியில் கலக்கி வருகின்றனர்.இந்த வார நிகழ்ச்சியில் பல சேலஞ்களை கோமாளிகளுக்கும் குக்குகளுக்கும் கொடுத்து திணற வைத்துள்ளனர்.இருப்பினும் கோமாளிகள் தங்களது நகைச்சுவையை இழக்காமல் போராடி காமெடியும் சமையலையும் இணைந்து செய்து வருகின்றனர்.தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in