The Indian Times

போட்டிபோட்டு உடற்பயிற்சி செய்யும் குக் வித் கோமாளி ஸ்ருத்திகா மற்றும் வித்யூலேகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் என ரசிகர்களை மிகவும் எதிர்பார்க்க வைத்த ஒரே நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்து வருகின்றனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் அட்டகாசம் காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்குள் கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.இவர்களுக்குள் நடக்கும் போட்டியின் இடையே கோமாளிகள் செய்யும் சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.அதிலும் குறிப்பாக பாலா மற்றும் மணிமேகலை செய்யும் சேட்டைகளை கூற வார்த்தைகளே இல்லை.

நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அடித்து கொள்ளும் குக்குகள் நிகழ்ச்சிக்கு வெளியே நெருங்கிய நண்பர்களாகவும்,சொந்தங்களாகவும் பழகி வருகின்றனர்.தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஸ்ருத்திகா மற்றும் வித்யூலேகா இணைந்து உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.போட்டி பட்டு உடற்பயிற்சி செய்துள்ளனர் இருவரும்.இந்த வீடியோ தற்போது குக் வித் கோமாளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in