The Indian Times

இந்தவாரம் ELIMINATION….மாலையை போட்டு அபிராமி சோலியை முடித்த மணிமேகலை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.இதனால் நாளுக்கு நாள் நகைச்சுவையும் போட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த வார ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அரையிறுதி சுற்று போட்டியில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வெறித்தமாக சமைத்துள்ளனர்.மேலும் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு இரண்டு கோமாளிகளை கொடுத்து நடுவர்கள் போட்டியின் நடுவே கொடுக்கும் சாதாரண இடைஞ்சல்களை விட பெரியதாக கொடுத்துள்ளனர்.கோமாளிகளும் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற கதாபாத்திரத்தில் வந்து அசத்தியுள்ளனர்.மேலும் இந்த வாரம் மணிமேகலை மாலையை போட்டு இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை கணித்துள்ளார்.அதுவும் அம்மு அபிராமி கழுத்தில் மாலையை போட்டுள்ளார்.மணிமேகலை என்ன சொன்னாலும் பழிக்கும் என்பதால் பயத்தில் உள்ளார் அபிராமி

Embed video credits : Vijay Television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in