The Indian Times

வடிவேலு மற்றும் மணிமேகலையாக வந்து அசத்திய பாலா & மணிமேகலை | COOK WITH COMALI

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது.

தற்போது இந்த வார ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்களுக்கு உதவியாக இரண்டு கோமாளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் கொஞ்சம் பயத்திலும் உள்ளனர்,ஏனென்றால் ஒருவர் வந்தாலே சமாளிக்க முடியாது,தற்போது இருவர் என்றால் என்ன ஆகுமோ என்று பெரும் பயத்தில் உள்ளது ப்ரோமோவில் தெரிகிறது.போட்டியாளர்கள் இந்த வாரம் சூப்பரான கதாப்பாத்திரங்களில் வந்து அசத்தியுள்ளனர்.அதிலும் குறிப்பாக மணிமேகலை மற்றும் பாலா இருவரும் ஜோடியாக வடிவேலு படத்தில் வரும் நகைச்சுவை கதாபாத்திரமான அண்ணன் தங்கை வடிவேலு மற்றும் மணிமேகலை வேடத்தில் வந்து அசத்தி காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in