The Indian Times

என் செல்லம்…தம்பி ARSH-யை கொஞ்சி விளையாடிய ஆல்யா மானசா மகள் AILA …

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை உலகிற்கு காண்பித்தார்.மேலும் தொடர்ந்து இனி வரும் வீடியோக்களில் அவர் இடம்பெறுவார் என தெரிவித்துள்ளார்.

தற்போது ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் இவரது மகள் ஐலா காலை எழுந்த உடனே தனது தம்பியை கொஞ்சி விளையாடியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவில் தம்பியை ஐலா கொஞ்சும் நிகழ்வு பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்த்துள்ளது.குழந்தைகள் என்றாலே அழகு தானே.இந்த வீடியோவை இவர்களது ரசிகர்கள் வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in