The Indian Times

வந்தாச்சு மீண்டும் குக் வித் கோமாளி… வெளியான PROMO-ஆல் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த நிகழ்ச்சில் கோமாளிகள் மற்றும் குக்குகள் மீண்டும் களம் இறங்கி உள்ளனர்.

இந்த குக் வித் கோமாளி குடும்ப திருவிழா நிகழ்ச்சி ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நிகழ்ச்சிக்கு ஆவலாக காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in