The Indian Times

ஏம்மா நீயே சுடுதண்ணி ஊத்திட்டு 2 மாசம் எந்திரிக்கல..மணிமேகலையை மரண கலாய் செய்த பாலா

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவிங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்து அசத்தி வருகிறார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் எகிறியுள்ளது.வாரம் தோறும் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை சிரிக்க வைத்து வருகின்றனர் . கடந்த வார நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரங்களில் வந்து அசத்தியுள்ளார்.

கடந்த வார நிகழ்ச்சியை கோமாளிகள் மிகுந்த கலகலப்பாக ஆகியுள்ளார்.பாட்ஷாவாக மணிமேகலை,அலெக்ஸ் பாண்டியனாக பாலா செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.பாட்ஷாவாக வரும் மணிமேகலை,நான் ஒரு அடி அடிச்சா ஹாஸ்பிடல்ல பத்து நாளுக்கு யாரும் எந்திரிக்க மாட்டீங்க என மாஸ் ஆக பேச,அதற்கு பாலா நீயே சுடுதண்ணிய காலுல ஊத்திட்டு 2 மாசமா எந்திரிக்கல என கூறி பங்கமாக காலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/Tv8V1dozpno

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in