The Indian Times

நடனத்தில் பிரித்து எடுக்கும் Bigg Boss சுஜா மற்றும் சிவாஜி…| Bigg boss ஜோடிகள்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை புதியதாக நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் மிரட்டல் நடனம் ஆடி டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்..வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் அமீர் மற்றும் பாவனி மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.

கடந்த வார நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இதனால் போட்டியாளர்கள் கமல்ஹாசனின் பாடல்களை எடுத்து பாடி அசத்தியுள்ளனர்.அதன்படி சுஜா மற்றும் சிவாஜி ஜோடிகள் காசு மேல காசு வந்து என்ற பாடலுக்கு மரண குத்து குத்தியுள்ளனர்.இந்த நடனம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.கமல்ஹாசனே இவர்கள் நடந்தினை வியந்து பார்த்து பாராட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் பிக் பாஸ் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

https://youtu.be/1EDwaAHFs_g

Embed video credits : vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in