The Indian Times

WALKING போன எங்க அப்பாவை காணோம்… வீடியோ வெளியிட்டு அழுத COOL சுரேஷ்

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.எந்த படம் வெளியானாலும் இவரின் கருத்தினை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.மேலும் இவ்வாறு பிரபலமாகியதில் படவாய்ப்பு அவர்க்கு வந்துகொண்டு உள்ளது.

Advertisement

தற்போது கூல் சுரேஷ் தனது தந்தையை காணவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.தந்தை பெயர் முத்தையா என்றும் அவருக்கு வயது 84 என்றும் ,கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர் தற்போது வரை வீட்டிற்கு வரவில்லை என்றும் அவரை தயவு செய்து கண்டுபிடித்து தர வேண்டும் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து கண் கலக்கியுள்ளார்.

https://www.youtube.com/shorts/8_4vnWJME_w?feature=share

Embed video credits : Behindwoods Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in