The Indian Times

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின் மருத்துவமனையில் அனுமதியா? வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் அந்தளவிற்கு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை கவர்ந்திழுப்பார்கள்.தற்போது சினிமாவை கலக்கி வரும் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் தான். இப்படி விஜய் டிவியில் தொகுப்பாளருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் தான் ஜாக்லின்.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறமையை கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.பலர் தன்னை கலாய்த்தாலும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நம்மால் நான்கு பேர் சிரித்தார்களா என்று தான் பார்ப்பார். இதனால் ஜாக்லினை பல ரசிகர்களுக்கும் பிடிக்க தொடங்கியது.தொகுப்பாளினியாக இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேன்மொழி பி ஏ என்ற நாடகத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் அசத்தினார்.தற்போது இவர் பிக் பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இவர் மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படத்தினை வெளியிட்டு எல்லாம் சரியாகி விடும் என குறிப்பிட்டுள்ளார்.ரசிகர்கள் ஜாக்லினுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in