The Indian Times

பண மழையில் நனையும் பொன்னியின் செல்வன்..முதல்நாள் வசூலால் சினிமா உலகத்தினையே அசரவைப்பு

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.தமிழ் சினிமாவில் பிற மொழி படங்கள் பெருமளவு வெற்றி பெற்று வருகிறது.தெலுங்கு,கன்னட படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை சுலபமாக பெற்று வருகிறது.ஆனால் தமிழ் சினிமா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.தற்போது பல நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவை மீண்டும் தலைநிமிர செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன். இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்

Advertisement

இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் பொன்னியின் செல்வன் ஆயிரம் கோடி வசூல் தொடும் ,இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இன்னும் வரக்கூடிய நாட்களில் இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் இருந்து பெற்று வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in