The Indian Times

அம்மா அப்பா இந்த தேசிய விருது உங்களுக்கு தான் – கௌரவப்படுத்திய நடிகர் சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்

Advertisement

தற்போது சூர்யா சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகன் என தேசிய விருதினை பெற்றுள்ளார்.இந்த விருதினை டெல்லியில் நடைபெற்ற 68வது தேசிய விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.இந்த விருதினை தந்தைக்கும் தாய்க்கும் அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவை பெருமளவு பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in