The Indian Times

அதிதி சங்கர் பத்தி பேசுனது தப்புதான்..கையெடுத்து கும்பிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்ட COOL சுரேஷ்

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இந்நிலையில் அண்மையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகிய விருமன் படம் வெளியாகி இருந்தது.இப்படத்தினை பார்த்து வெளியே பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த கூல் சுரேஷ் ,விருமன் கதாநாயகி அதிதி சங்கரை காதலிப்பதாகவும்,.அவரது அப்பா இயக்குனர் ஷங்கரை மாமா என அழைத்து பொண்ணு கேட்டார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு வைரலாகியது.

Advertisement

தற்போது அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,ஷங்கர் சார் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,என்ன மன்னிச்சிடுங்க,நான் அது மாதிரி பேசியிருக்க கூடாது.என்கூட படிச்ச பொண்ணு தேன்மொழி மாதிரி இந்த பொண்ணு இருந்துச்சு அதனால எமோஷனலா சங்கர் சார் பொண்ணுமேல ஆசைப்பட்டு லவ் லெட்டர் கொடுத்துட்டேன்.என்ன மன்னிச்சிடுங்க.ஷங்கர் சார் உங்கள விமர்சனம் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது ,அதிதி நான் தெரியாம பேசிட்டேன் நீங்க எனக்கு தங்கச்சி தான் வேணும்,என மன்னிப்பு கேட்டுள்ளார்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in