இந்த பாட்டையுமா!!! பொன்னி நதி பாட்டை குடத்தில் இசை போடு பாடி அசத்திய திருமூர்த்தி

விளம்பரம்
விளம்பரம்

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டுகாரியுடன் வெறியாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்..PRINCE FIRST SINGLE வெளியாகியது

இந்த பாட்டையுமா!!! பொன்னி நதி பாட்டை குடத்தில் இசை போடு பாடி அசத்திய திருமூர்த்தி 1

விளம்பரம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  வெறி பிடித்த சூரனாக இயக்குனர் செல்வராகவன் மிரட்டும் பகாசூரன் TEASER

இந்த பாட்டையுமா!!! பொன்னி நதி பாட்டை குடத்தில் இசை போடு பாடி அசத்திய திருமூர்த்தி 2

விளம்பரம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது.இப்பாடலை பாடகர் திருமூர்த்தி குடத்தில் தாளமிட்டு பாடி அசத்தியுள்ளார்.பல பெரிய பாடல்களுக்கும் குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடி அசத்தி வருகிறார் திருமூர்த்தி.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அரச நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொன்னியின் செல்வன் நந்தினி...செம்ம கம்பீரமா இருக்காங்களே ஐஸ்வர்யா ராய்

விளம்பரம்

Embed video credits : singer thirumoorthy

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment