The Indian Times

SK நீங்களா…SK-வை கண்ட உடன் கைகொடுத்த நடிகர் அமீர்கான்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது

Advertisement

தற்போது சிவகார்த்திகேயன் அஜித் விஜய் அளவுக்கு தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கிறார்.இவரது படங்கள் தற்போது 100 கோடிகளில் வசூல் சாதனை செய்து வருகிறது.பாலிவுட்டில் முன்னணி நடிகர் அமீர்கான் இவர் தற்போது தயாரித்து நடித்துள்ள படம் லால்சிங் சத்தா.இப்படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.இப்படத்தின் பிரீமியர் காட்சியை காண நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயனை கண்ட அமீர்கான் உடனே அவருக்கு கைகொடுத்துள்ளார்.சிவகார்த்திகேயனின் வளர்ச்சி எவ்வளவு உயரம் என்பது இதனை பார்க்கும் பொழுதே தெரிகிறது என ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Embed video credits : AMN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in