The Indian Times

நடிகர் ஆன பிறகு சூப்பர் ஸ்டார் தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.ஆரம்பத்தில் கர்நாடகாவில் ரஜினி பேருந்து நடத்துனர் என்பது பலருக்கும் தெரிந்ததே.

Advertisement

எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்க கூடாது என்று நினைப்பவர் ரஜினிகாந்த்.நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் வந்து நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்ற உடன் அவரது கண்டக்டர் நண்பர்களை கர்நாடகாவில் நேரில் சென்று சந்தித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மனசே தனி மனசு என அவரை பாராட்டி புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in