The Indian Times

A.R.RAHMAN மயக்கும் குரலில் மறக்குமா நெஞ்சம் பாடல் வெளியாகியது…வெந்து தணிந்தது காடு SONG

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.சிம்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் இவர்.தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.புது புது ஸ்டைலை சினிமாவில் அறிமுகப்படுத்தி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த சிலம்பரசன்.ஆண்கள் பெண்கள் என போட்டி போட்டு இவருக்கு ரசிகர்களாக மாறினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின்  பாடலான மறக்குமா நெஞ்சம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

Advertisement

பாடலாசிரியர் தாமரை பாடல் வரிகளில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஏ ஆர் ரஹ்மான் இப்பாடலை பாடியுள்ளார் இவரது குரலில் கேட்கும்பொழுது இப்பாடலில் ஒரு ஈர்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இப்பாடல் இப்படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

EMBED VIDEO CREDITS : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in