The Indian Times

குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள் மீண்டும் REUNION

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிகழ்ச்சி முடியும் பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறிவிடுவது இயல்பான ஒன்று.அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஒற்றுமையாக்கி புது புது நட்புகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர்கள் தான் ஸ்ருத்திகா,தர்ஷன்,முத்துக்குமார் மற்றும் அம்மு அபிராமி .இவர்கள் தற்போது நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.தற்போது இவர்கள் இணைந்து மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

இந்த முறை சீசன் நான்காவது போட்டியாளர்களுடன் போட்டி போட்டு சமையல் செய்து அசத்தியுள்ளார்கள்.

இந்த ப்ரோமோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

தற்போது இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in