முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை வாரி குவிக்கும் கவினின் DADA

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகியவர் கவின்,இவர் முன்னதாக தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார்.முதன்முதலில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதை ஏற்றுக்கொண்டு அந்த தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி அனைவருக்கும் தெரிந்தவர் ஆகினார்.இவர் முதன் முதலாக நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை வாரி குவிக்கும் கவினின் DADA 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து அசத்தி வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்,மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை வாரி குவிக்கும் கவினின் DADA 2

விளம்பரம்

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் படத்திற்கு தொடர்ந்து நல்ல கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.இதனால் தற்போது இப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இப்படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது,நிச்சயம் இது முன்னணி நடிகர்களுக்கு இணையான வசூல் என்றே கூறலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment