காதல் மன்னனாக கலக்கும் BIGGBOSS கவின் – DADA படத்தின் டீசர் வெளியாகியது

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் சென்னைக்கு வரும் இளைஞர்களில் ஒருவர் தான் கவின். இவர் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது தான் கனா காணும் காலங்கள் தொடரில் வாய்ப்பு.இதில் மாணவனாக நடித்து முதல் முறையாக தொலைக்காட்சியில் களம் இறங்கினார்.இந்த தொடருக்கு பிறகு இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பீசா படத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தது,கிடைக்கும் வாய்ப்பெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டு என்றாவது ஒருநாள் மேல வந்துவிடுவோம் என கடுமையாக உழைக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

காதல் மன்னனாக கலக்கும் BIGGBOSS கவின் - DADA படத்தின் டீசர் வெளியாகியது 1

விளம்பரம்

பின்னர் பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதை ஏற்றுக்கொண்டு அந்த தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி அனைவருக்கும் தெரிந்தவர் ஆகினார்.இவர் முதன் முதலாக நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார் கவின்,பிக் பாஸ் சீசனில் வெற்றிபெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

காதல் மன்னனாக கலக்கும் BIGGBOSS கவின் - DADA படத்தின் டீசர் வெளியாகியது 2

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பு வரவே அதில் கவனத்தினை செலுத்தி நடித்து வருகிறார்.,முன்னதாக இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்,மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment