The Indian Times

கானா மட்டும் பாடுவேன்னு யாரு சொன்னா… வா வாத்தி பாடலை பாடி ரசிகர்களை அசரவைத்த BIGG BOSS இசைவானி

ஆண்கள் மட்டும் தான் கானா பாட வேண்டுமா ஏன் பெண்கள் பாடக்கூடாதா பெண்களாலும் முடியும் என கானா பாடகியாக உருவெடுத்தவர் இசைவாணி. கானா பாடல்களில் சிறந்து விளங்குபவர் இவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குழுவுடன் கானா பாடி அசத்தியவர் இவர்.இவர் பாடும் கானா பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் காதல் உண்டு இவருக்கு கானா மேல் தான் அதிக காதல்.கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மேலும் சினிமாவிலும் தற்போது சில கானா பாடல்களை பாடி வருகிறார் இசைவாணி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.நீண்ட நாட்கள் உள்ளே இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 வது நாளே குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

Advertisement

இவர் கானா பாட்டு மட்டும் தான் பாடுவார் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் மெலோடி பாடல்களும் வரும் என நிரூபிக்க வா வாத்தி பாடலை அப்படியே பாடிய இசைவாணி.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இசைவாணியை பார்த்து அசந்துள்ளனர்,செம்ம வாய்ஸ் உங்களுக்கு நீங்கள் பாடினால் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என தோன்றுவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in