The Indian Times

சார் இருங்க நானும் வரேன்..சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட AR ரஹ்மான்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.தற்போது ரஹ்மான் வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்த படங்களின் பாடல்கள் பெருமளவு ஹிட் அடித்தது.மேலும் நடப்பாண்டில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பல படங்கள் வெளியாக உள்ளது.

Advertisement

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.இந்நிலையில் நேற்று ரஹ்மான் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.புகைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுக்க ரஹ்மான் ஆவலாக முன்னே வந்திருப்பதை காணமுடிகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in