The Indian Times

“4000 பேரா வேலையில்லாம இத பாத்துட்டு இருகாங்க” சற்றும் யோசிக்காமல் கலாய்த்த தீபா அக்கா!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபர்களும் ஒருவர் தீபா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சன் டிவி , விஜய் டிவியில் வரும் சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் தீபா. ஆனால் அவருக்கு பெரும் புகழும் வாங்கி தந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் ஸூக்கு வித் கோமாளி தான்.

இந்நிலையில் நேற்று குக்கு வித் கோமாளி சக்தியுடன் சேர்ந்து instagram live ல் பேசினார் தீபா. அப்போது விடியோவை 4000 பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஷக்தி கூற , 4000 பேரா வேலையில்லாம இதை பாத்துட்டு இருகாங்க என்று சற்றும் யோசிக்காமல் கலாய்த்துவிட்டார் தீபா. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in