The Indian Times

நான் தமிழில் தான் பேசுவேன்… தெலுங்கு ரசிகர்கள் முன்பு கெத்தாக கூறிய தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது. தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷுக்கு இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் படம் இது ஆகும். இப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தின் இசைவெளியிட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது,அதனை தொடர்ந்து நேற்று தெலுங்கு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.அங்கு தெலுங்கு ரசிகர்கள் தனுஷை அவரது விஐபி படத்தில் வந்த வசனம் ஒன்றை பேச சொல்லவே,அதற்கு பதிலளித்த அவர் தமிழில் தான் பேசுவேன் என மாஸாக கூறியுள்ளார்,மேலும் அந்த அமுல் பேபி வசனத்தினை தமிழில் பேசியுமுள்ளார்.இந்த வீடியோ தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in