The Indian Times

பிரபு தேவா அண்ணே முடியல…. நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து கடுமையாக உடற்பயிற்சி செய்த சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் மீண்டும் பட இயக்குனராக களம் இறங்கி உள்ளார்.சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாகி வருகிறது.அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

Advertisement

அதன்படி பிரபல நடிகர்,இயக்குனர் என சினிமாவில் பல்வேறு முகங்களை கொண்ட பிரபுதேவா உடன் இணைந்து உடற்பயிற்சி செய்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அண்ணன் உடன் உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவை லைக் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் மேலும் சூப்பர் ஸ்டாரிடம் உள்ள அதே எனெர்ஜி ஐஸ்வர்யாவிடம் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in