LEOவில் இருந்து வெளியேறிவிட்டேனா? நடிகை த்ரிஷாவே கூறிய உண்மை

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

LEOவில் இருந்து வெளியேறிவிட்டேனா? நடிகை த்ரிஷாவே கூறிய உண்மை 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

LEOவில் இருந்து வெளியேறிவிட்டேனா? நடிகை த்ரிஷாவே கூறிய உண்மை 2

விளம்பரம்

தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா நடிகர் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் இணைந்தது விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இந்நிலையில் அண்மையில் காஷ்மீருக்கு படக்குழுவினருடன் நடிகை த்ரிஷா சென்றார்,சென்ற இரண்டு நாட்களிலேயே அவர் சென்னை திரும்பியதாக சில புகைப்படங்கள் வெளியாகின,இதனை தொடர்ந்து லோகேஷுக்கும் த்ரிஷாவுக்கும் சண்டை அதனால் அவர் வெளியேறிவிட்டார் என செய்திகள் பரவி வந்தது.இந்நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை த்ரிஷா மறைமுகமாக இது எல்லாம் வதந்தி என்று சொல்வதை போல அவர் காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதனால் தொடர்ந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் த்ரிஷா

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

LEOவில் இருந்து வெளியேறிவிட்டேனா? நடிகை த்ரிஷாவே கூறிய உண்மை 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment