The Indian Times

களத்தூர் கண்ணம்மா பட கதையை எடுத்து வச்சிருக்காங்க … கவினின் “DADA” BLUESATTAI மாறன் REVIEW

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகியவர் கவின்,இவர் முன்னதாக தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார்.முதன்முதலில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதை ஏற்றுக்கொண்டு அந்த தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி அனைவருக்கும் தெரிந்தவர் ஆகினார்.இவர் முதன் முதலாக நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து அசத்தி வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்,மேலும் இவர்களுடன் பாக்யராஜ்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

Advertisement

இப்படத்தினை விமர்சகர் BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது , நீங்க நிறைய படம் பாக்குறவங்களா இருந்தா இந்த படத்துல அடுத்த சீன் என்ன வரும்னு முன்னாடியே கணிச்சிடுவீங்க,ஆனா இந்த படத்துல ஒவ்வொரு சீனையும் புதுசு புதுசா யோசிச்சு பண்ணுனதுதான் சுவாரஸ்யமா இருக்கு.சீரியஸ் ஆன கதை இது ஆனால் இதுல சின்ன சின்ன காமெடியை போட்டு நல்ல பண்ணிருக்கலாம்.படம் பார்க்கும் பொழுது ஒரு சீன் கூட திரையில் இருந்து எடுக்க முடியலை அவ்ளோ சூப்பரா இருக்கு,களத்தூர் கண்ணம்மா கதையை வச்சி இந்த படத்தையும் எடுத்து வச்சிருக்காங்க.இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in