The Indian Times

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியாகியது

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

Advertisement

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்,இப்படத்தில் ஒன்னோட நடந்தா என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார்.இந்த பாடலை முதல் பாடலாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,அந்தளவிற்கு தனது படத்தினால் வெற்றிமாறன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்,இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,அண்மையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Embed video credits : RS INFOTAINMENT PVT LTD

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in