The Indian Times

அன்னபூரணி என்ன லவ்வு பண்ணு நீ… சித் ஸ்ரீராம் மெல்லிய குரலில் DSP படத்தின் 2ND SINGLE வெளியாகியது

நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி,சத்யராஜ்க்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என கலக்கும் ஒரே நடிகர் இவர். வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களை விசிலடிக்க வைத்தது என்றால் அது விஜய் சேதுபதி ஒருவரே.அந்த அளவுக்கு இவரது நடிப்புக்கு ரசிகர்கள் உள்ளனர்.ரசிகர்களுக்காக நல்ல கதைகளை கொடுக்க பல மெனக்கெடல்களை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய சில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்துள்ளார்.கார்த்திகேயன் சந்தானம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.இதுவரை சிவகார்த்திகேயனை வைத்து மட்டுமே ஹிட் கொடுத்த பொன்ராம் தற்போது விஜய் சேதுபதியை வைத்து இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படம் நாளை மறுநாள் டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தில் சித் ஸ்ரீராம் குரலில் பொன்ராம் பாடல் வரிகளில் உருவாகியுள்ள அன்னபூரணி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் சித் ஸ்ரீராம் குரலை பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in