The Indian Times

சுனிதாவை காண அசாம்க்கே சென்ற CWC சந்தோஷ்…. ராஜவிருந்து வைத்த சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சந்தோஷ் பிரதாப்.முன்னதாக பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று கொடுத்திருக்கிறது.சினிமாவில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்த சந்தோஷுக்கு வாய்ப்பு 2014 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் மூலம் கிடைத்தது.அவர் இயக்கிய கதை திரைக்கதை வசனம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல படங்களில் நடித்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த படத்திலும் கிடைக்கவில்லை இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடினார்.இறுதியாக சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு அங்கும் அசத்தினார்.வித விதமான சமையல்கலை செய்து மக்களையும் நடுவர்களையும் கவர்ந்தார்.திடீரென சந்தோஷ் எலிமினேட் ஆகியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது

Advertisement

இருப்பினும் மீண்டும் வைல்ட் கார்டில் வந்து வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்து அங்கும் சமைத்து அசத்தினார். இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுனிதாவுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது.இவர் தற்போது அசாமில் உள்ள சுனிதாவை காண சந்தோஷ் நேரில் சென்றுள்ளார்.அவருக்கு அசாமில் ராஜ விருந்து வைத்துள்ளார் சுனிதா.இதனை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருவரது ஜோடி பொருத்தமும் சூப்பர் என கூறி கமெண்ட் செய்து வருகிறது.

Embed video credits : SUNITA XPRESS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in