மலையாளத்தில் முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.இவர் நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியாவை வைத்து நேரம் படத்தினை இயக்கினார் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தின் மூலம் இயக்குனராக மலையாள சினிமாவில் கால் தடம் பதித்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய ப்ரேமம் படம் மாபெரும் சூப்பர் ஹிட் ஆகியது.மலையாள ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களையும் இப்படம் சென்றடைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது அல்போன்ஸ் புத்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கோல்டு என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக ப்ரித்திவிராஜ் நடித்துள்ளார்,கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பாடல்கள்,ட்ரைலர் என எதுவுமே வெளியிடாமல் படத்தினை நேரடியாக வெளியிட்டுள்ளது.ரசிகர்கள் காலை முதல் இப்படத்தினை ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்.
படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நன்றாக இல்லை ,ப்ரேமம் படத்திற்கு இணையாக இல்லை.ரொம்ப மோசம் என கூறி வருகின்றனர்.அல்போன்ஸ் புத்திரன் படம் மாதிரியே இல்லை என ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.சிலர் படம் பரவாயில்லை பார்ப்பது போல உள்ளது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படி கலவையான விமர்சனங்களை கோல்டு திரைப்படம் பெற்றுள்ளது
Embed video credits : SHRUTI TV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in