The Indian Times

விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்ட ஜீவா.. கதறி அழுத பிரியா.. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. ப்ரியா வீட்டுக்கு கிரஹபிரேவசம் செய்துள்ளார்,அப்பொழுது வீட்டில் தீ பிடிக்கவே அதனை அணைக்க செல்லும் பொழுது படியில் இருந்து கீழே தவறி விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தால் கதறி அழுகிறார்,உடனே ஜீவா அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்

Advertisement

தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ஜீவா விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டுள்ளார்,அதனை பார்த்து கதறி அழுதுள்ளார் பிரியா. மேலும் ஜீவாவிடம் சண்டையிட்டு சென்றுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க தானே விவாகரத்து கேட்டிங்க அவர் கையெழுத்து போட்டிருக்கிறார் என கூறி செம்ம கடுப்பாகியுள்ளனர்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in