The Indian Times

GV Prakash பிறந்தநாளிற்கு cake ல் பெயரை மாற்றி எழுதி மாட்டிக்கொண்ட தீனா!

தமிழ் சினிமாவில் சிறந்த இசைமைப்பாளர் மற்றும் நடிகராகா வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிகராக நடித்த படங்களை விட இவர் இசையமைத்த படங்களை தான் மக்கள் பெரியளவில் விரும்புகுறார்கள். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததால் ஒரு ஹீரோவாக இவரால் வெற்றியை தர முடியவில்லை. டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்

Advertisement

திரிஷா இல்லனா நயன்தாரா , பென்சில் , வாட்ச்மன் , சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் நடித்துள்ள பாச்சிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா மாப்ளே. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். ஓ.டி.டி யில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் சென்றது.

Advertisement

அதற்கு விஜய் டிவி தீனா இந்த கோவிட் காலத்திலும் சின்னதாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கேக் கொண்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தீனா கேக்கில் ஜி.வி.பிரகாஷ் என்ற பெயருக்கு பதில் வொய்.வி.பிரகாஷ் என்று எழுதியுள்ளார். அந்த கலகலப்பான விடியோவை தற்போது தீனா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in