The Indian Times

விஜய் டிவி ஜாக்குலினுக்கு விரைவில் திருமணமா..? – அவரே வெளியிட்ட வீடியோ

விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி தற்போது சீசன் 5,6,7 என்று கணக்கே இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் தான் ஜாக்லின். இவர் குரல் மிகவும் வித்யாசமாக இருக்கும். அதை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர் என்ற நாடகத்தில் கதாநாயகியின் தோழி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் அப்போது அவர் அவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் நிலையில் இல்லை. Watch the video below.

அதன் பிறகு இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுடன் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாரா தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படம் முழுவது தனது பங்களிப்பை வழங்கி இருப்பார். தற்போது இவ‌ர் தேன்மொழி BA என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவ தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ ஒன்று செய்து இருந்தார்.

Advertisement

அப்போது ரசிகர்கள் அவரை உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டு இருந்தனர். அதற்கு அவர் யாரும் எதிர்பாராத வகையில் பதில் சொல்லி இருக்கிறார். எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்து வருகிறார்கள் என்று குண்டை தூக்கிப் போட்டார். அதன் பின் உங்களில் யாரவது நல்ல குணத்துடன் உள்ள மாப்பிள்ளை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி இளைஞர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in