The Indian Times

லோஸ்லியாவுடன் குத்தாட்டம் போடும் ஹர்பஜன் சிங் – வைரல்

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரிய ஆகியோர் எழுதி இயக்கிய படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிக் பாஸ் லோஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாகவும், சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.  Watch the video below.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தனது தமிழ் ட்வீட் மூலம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். ஹர்பஜன் ஹீரோவாகவும், அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். பிக் பாஸ் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள லாஸ்லியாவையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement

படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையிலில் இந்த படத்திலிருந்து லொஸ்லியாவும் ஹர்பஜன் சிங்கும் குத்தாட்டம் போடும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹர்பஜன், “தமிழனின் தாய்மடி #கீழடி #தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி! எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த Summer நம்ம படம் #Friendship வருது #தளபதி #தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்” என பதிவிட்டுள்ளார்.

Video Credits: Galatta Tamil

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in