The Indian Times

ஜெயிலராக அதிரடி காட்டும் சூப்பர் ஸ்டார்-JAILER FIRST LOOK POSTER

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள்,அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தினை தெளிவாக எடுக்க வேண்டும் என குறிக்கோளாக உள்ளார் ரஜினிகாந்த்

Advertisement

தற்போது இவரது அடுத்தப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்,சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இப்படத்திற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் படம் வெற்றிபெற வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in