The Indian Times

இதெல்லாம் ஒரு கதையா…படம் ரொம்ப WASTE,ஒண்ணுமே இல்லை படத்துல.. ஜப்பான் படத்தின் மக்கள் கருத்து

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் படம் வெளியாக உள்ளது,ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்,சுனில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது, படத்தினை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,இதெல்லாம் ஒரு படமா, கதையே இல்லை, இது தீபாவளிக்கான படம் இல்லை வேறே நல்ல படமா போங்க, படம் ரொம்ப வேஸ்ட்,கார்த்தியோட 25வது படம்னு சொன்னாங்க அதுக்கு தகுந்த மாறி எடுக்கணும் ஆனா இது அது இல்லை,என நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in