The Indian Times

அறம் இயக்குனர் கோபி நைனார் இயக்கும் கருப்பர் நகரம் படத்தின் டீசர் இதோ

சுப்ரமணியபுரம் படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றவர் ஜெய்.இவர் பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆகியவர்.தற்போது ஹீரோவாக நடித்து சினிமாவை கலக்கி வருகிறார்.சில தோல்விப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டு முயற்சி செய்து வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் சுப்ரமணியபுரம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்ன நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து 8 படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெய்.மேலும் நடிகர் ஆக மட்டும் இல்லாமல் இவர் நடித்த வீரபாண்டியபுரம் படத்திற்கு இசை அமைத்தும் தற்போது இசையமைப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார் ஜெய்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் கருப்பர் நகரம் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் விரைவில் வெளியாக உள்ளதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Embed Video Credits : THENANDAL FILMS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in