The Indian Times

முதல் முறையாக மகனின் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்த பரிதாபங்கள் சுதாகர்

யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர்! இவர்களை இளைஞர்கள் மத்தியில் கேட்டால் யாருமே தெரியாது என்று சொல்லவே மாட்டார்கள்! அந்த அளவுக்கு இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் இவர்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அதில் நிராகரிக்கப்பட்டு பின்பு யூடியூபால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றனர்

Advertisement

மக்கள் இவர்களை அதிக அளவில் ரசிக்க முக்கிய காரணமே அன்றாடம் மக்கள் மத்தியில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்கள் பாணியில் படமாக்கி நகைச்சுவை விருந்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். கோபி மற்றும் சுதாகர் அவர்களுடைய நண்பர்களோடு இணைந்து வீடியோக்கள் செய்து வருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. இவ்வாறு இருக்கையில் புகழால் சில படங்களும் நடித்து இருக்கின்றனர்.மேலும் இவர்களது லட்சியமான சொந்தமாகி படம் இயக்கம் கனவையும் நனவாக்கும் பணியில் படு தீவிரமாக இருந்து வருகின்றனர்

Advertisement

இந்நிலையில் சுதாகருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது மேலும் இவருக்கு ஆண் மகனும் பிறந்துள்ளார்.இவரின் மகனின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in