The Indian Times

Nayanthara வை ஓட ஓட துரத்திய Vijay Sethupathi ! காதுவாக்குல ரெண்டு காதல் shooting spot video

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா மூவரும் ஒன்று சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் காதுவாக்குல 2 காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படம் நானும் ரவுடி தான் மெகா ஹிட்டானது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி ஒன்று

சேர்ந்துள்ளது. இந்த திரைப்படமும் வெற்றி அடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீப காலமாக இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் படக்குழு பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடும்

Advertisement

ரசிகர்கள் இணையத்தில் இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா மூவரும் பஸ்சில் புட் போர்டில் செல்லும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. இந்நிலையில் தற்போது நாடு ரோட்டில் நயன்தாரா பதறி ஓட விஜய் சேதுபதி அவரை துரத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below Video Embeded credits to Little Talks youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in