The Indian Times

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உலகநாயகன்… அலறிய திரையுலகம்..பதறிய ரசிகர்கள்

சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர். தனது கடின உழைப்பினால் இன்று சினிமாவில் தனக்கான நிரந்தர இடத்தினை பிடித்து தனக்கான ரசிகர்களையும் உருவாக்கி ஜாம்பவான் ஆக உள்ளார்.

Advertisement

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் பிக் பாஸ் 6வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

தற்போது திடீரென உடல்நல குறைவால் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளாராம் கமல்ஹாசன்,மேலும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ,அவரை நன்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in