The Indian Times

முதல் முறையாக ஜோடியாக வந்து திருமண தேதியை அறிவித்த கவுதம் மஞ்சிமா

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இருவரும் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது மஞ்சிமா மோகனுடன் கவுதம் கார்த்திக் நெருங்கி எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தங்களது காதலை இருவரும் உறுதி செய்தனர்.இருவரும் இன்று தங்களது திருமணம் குறித்து முதல் முறையாக ஜோடியாக மேடையில் வந்து அறிவித்துள்ளனர்.அதன்படி இவர்கள் இருவருக்கும் திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in