The Indian Times

வாரிசு SHOOTING சட்டவிரோதமாக நடைபெற்றதா? தொடர்ந்து விஜய்க்கு எழும் பிரச்சனைகள்.. படக்குழுவுக்கு நோட்டீஸ்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

அண்மையில் இப்படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் இப்படத்திற்கு முதலில் தெலுங்கில் பண்டிகை காலங்களில் வெளியிட தெலுங்கு திரையுலக சினிமா தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்தனர்,இந்நிலையில் வாரிசு படத்தில் யானையை வைத்து படக்குழு அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக கூறி இந்திய விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக விஜய் படங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in