The Indian Times

DETECTIVE-டா நானு என் POSTER-அ ஓட்டல்ல பார்சல் போட வச்சிருக்கீங்க…. AGENT கண்ணாயிரம் SNEAK PEEK

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Advertisement

சந்தானம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் ரியா சுமன்,புகழ்,முனீஸ்காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி ,இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு,இது ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.வழக்கம் போல தனது நகைச்சுவைகளால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் சந்தானம்.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in