The Indian Times

பத்தலை பத்தலை பாடலுக்கு நடிகை ராதிகாவுடன் குத்தாட்டம் போட்ட கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் புதியதாக எதையாவது செய்து மக்களை மகிழ்விக்க நினைப்பார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அதே கதாபாத்திரமாக மாரி அனைவரையும் வாயடைக்க செய்துவிடுவார் இவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்போது அறிமுகம் ஆகும் நட்சத்திரங்களுக்கும்,கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களுக்கும் நடிப்பில் முன் உதாரணமாக திகழ்கிறார் கமல்ஹாசன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இதனை படக்குழு கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.ரசிகர்கள்,உறவினர்கள் ,நடிகர்கள் என கமலஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று அனைத்து நடிகர்களையும் அழைத்து பிறந்தநாள் பார்ட்டி வைத்துள்ளார்.இதில் நடிகை ராதிகாவுடன் பத்தலை பத்தலை பாடலுக்கு ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : Wall Post

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in